Home > அண்ணாச்சிக்கு ஜோடியாகும் முன்னணி நடிகை - யார் தெரியுமா?
அண்ணாச்சிக்கு ஜோடியாகும் முன்னணி நடிகை - யார் தெரியுமா?
by adminram |
அண்ணாச்சி என அழைக்கப்படும் சரவணா ஸ்டோர் நிறுவனரின் மகன் சரவணன் கடந்த சில வருடங்களாக சரவணா ஸ்டோர்ஸ் தொடர்பான விளம்பரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
இந்நிலையில், அவரை வைத்து விளம்பர படங்களை இயக்கி வரும் இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இரட்டையர்கள் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். ரூ.10 கோடி செலவில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு சமீபத்தில் ஒரு பாடல் காட்சி தொடர்பான படப்பிடிப்பு நடந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது.
ஏற்கனவே இப்படத்தில் கீத்திகா திவாரி என்கிற நடிகை நடித்து வரும் நிலையில், தற்போது 2வது ஹீரோயினாக தமன்னா நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இதுபற்றி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story