More

அண்ணாத்த ரஜினியை சந்தித்த லெஜெண்ட் சரவணன்… தீயாய் பரவும் புகைப்படம்…

விளம்பரங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடனமாடி தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன். இவர் முழு பெயர் சரவணன் அருள். எதிர்பார்த்தது போலவே சினிமாவிலும் நடிக்க துவங்கினார்.

Advertising
Advertising

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

தற்போது இவர் அண்ணாத்த படப்பிடிப்பிற்கு சென்று நடிகர் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்ணாத்தே படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

Published by
adminram

Recent Posts