More

சொன்னபடி கேளு…சொல்லுறது பாஸு… பிக்பாஸ் அசத்தல் புரமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

Advertising
Advertising

இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியின் அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசனே ஒரு வீடியோ மூலம் சமீபத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில், சொன்னபடி கேளு.. சொல்லுறது பாஸு என ஒரு அசத்தலான புரமோ வீடியோவை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இதில், தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப பிக்பாஸ் குரல் வழியாக மக்களுக்கு அறிவுரை சொல்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

Published by
adminram

Recent Posts