கைதி 2 படத்தில் விஜய், சூர்யா, கமலா? ஆனா அதுல ஒரு ட்விஸ்ட்டு…

by ராம் சுதன் |

கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் பரபரப்பாக தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில் இப்படத்தினை சூப்பர்ஹிட்டாக சரியாக காய் நகர்த்த லோகேஷ் கனகராஜ் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கைதி. இப்படத்தில் கார்த்தி முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். ஒருநாள் இரவில் நடக்கும் கதை என்றாலும் படம் அதிரடி திருப்பங்களால் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியிருந்தார். அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக கோலிவுட்டில் முக்கிய இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மாறினார். அது மட்டுமல்லாமல் இப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற சிறப்பு வேடத்தில் கிளைமாக்ஸ் முடிந்த ஐந்து நிமிடத்தில் தோன்றி இருப்பார்.

அந்த கதாபாத்திரமும் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்ற நிலையில் ரோலக்ஸை தனி படமாக இயக்கவும் லோகேஷ் கனகராஜ் முடிவெடுத்து இருக்கிறார். விஜயை வைத்து லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் கோலிவுட்டில் கடைசியாக இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அது அவரின் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கீழ் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி திரைப்படம் முடித்த கையோடு கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 2025ம் ஆண்டு கைதி2 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கவும் திட்டமிட்டு இருக்கிறாராம்.

மேலும், இப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் சூர்யா இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், அது அவர்களின் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கேரக்டராகவே இருக்கும் எனவும் கூறப்படுகிறது. லியோ படத்தினை போல விஜய் குரல் கொடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story