மதகஜராஜா படம் படுதோல்வி!.. இது தெரியாமலா எல்லாரும் ஃபயர் விட்டீங்க!…

Published on: March 18, 2025
---Advertisement---

Madhagajaraja: தமிழ் சினிமாவில் எப்போதும் கலகலப்பான படங்களை இயக்கி ரசிகர்களை சிரிக்க வைத்து வருபவர் சுந்தர் சி. 30 வருடங்களாக கோலிவுட்டில் இயக்குனராக கலக்கி வருபவர். தன்னுடைய படத்தை ரசிகர்கள் என்ஜாய் பண்ண வேண்டும், தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்க வேண்டும் என நினைக்கும் இயக்குனர் இவர்.

அதை இப்போது வரை பின்பற்றி வருகிறார். காதல், காமெடி கலந்த குடும்பபாங்கான திரைப்படங்களை எடுப்பதே இவரின் ஸ்டைல் சுந்தர் சி படமென்றால் குடும்பத்துடன் போய் பார்த்து சிரித்துவிட்டு வரலாம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியதுதான் அவர் செய்த சாதனை.

ரஜினி கமல்: ரஜினியை வைத்து அருணாச்சலம், கமலை வைத்து அன்பே சிவம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஆனால், அவர்களை தவிர பெரிய நடிகர்கள் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கவில்லை. வளரும் சமயத்தில் அஜித் சுந்தர் சியை தேடிச்சென்று ‘உங்கள் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என வாய்ப்பு கேட்டு அவரின் இயக்கத்தில் ‘உன்னைத் தேடி’ என்கிற படத்தில் நடித்தார்.

விஜயை வைத்து படம் இயக்க ஆசைப்பட்ட சுந்தர்.சி பலமுறை முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சுந்தர்.சி படங்களில் காமெடி காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.

அரண்மனை சீரியஸ்: அரண்மனை சீரியஸ் படங்களில் பேய்தான் பிரதானம் என்றாலும் அந்த படங்களில் பல காட்சிகளிலும் காமெடி சிறப்பாகவே இருக்கும். அரண்மனை 3 பாகங்களுமே வெற்றி பெற்றது. அடுத்து அரண்மனை 4 இயக்கும் முயற்சியில் சுந்தர் சி ஈடுபட்டுள்ளார். ஒருபக்கம் விஷாலை வைத்து 12 வருடங்களுக்கு முன்பு அவர் இயக்கிய மதகஜராஜா திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. 10 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் தமிழகத்தில் 50 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது.

மதகஜராஜா: பொங்கலுக்கு வெளியான படங்களில் மதகஜராஜா படமே அதிக வசூலை பெற்றிருக்கிறது. ஆனால், இந்த திரைப்படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து ஆந்திராவில் வெளியிட்டார்கள். ஆனால், அங்கு இப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆந்திராவில் பல கோடிகளை அள்ளலாம் என கணக்குப்போட்டு வெளியிட்டு ஏமாற்றம் அடைந்திருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment