More

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…. மாஸ்டர் மாளவிகாவின் அழகு போட்டோஸ்!

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.

Advertising
Advertising

விஜய், விஜய்சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் படம் ஓடிடியில் ரிலிஸ் ஆகுமா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. ஆனால், என்ன ஆனாலும் படம் திரையரங்கில்தான் வெளியாகும் என்பதில் விஜய் மற்றும் தயாரிப்பு தரப்பு உறுதியாக இருந்தது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக செயல்பட்டு வரும் மாளவிகா மோகனன் அவ்வப்போது கிளாமர் உடை அணிந்து ஹாட் போஸ் கொடுத்து இணயத்தை சூடேற்றுவார். ஆனால், தற்ப்போது வழக்கத்திற்கு மாறாக சுடிதார் அணிந்து ஹோம்லி பெண்ணாக அழகு போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Published by
adminram

Recent Posts