More

துருவ் விக்ரம்மை இயக்கும் மாரி செல்வராஜ் – உருவானது புதிய கூட்டணி !

தனுஷ் நடிக்கும் கரணன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை அவர் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertising
Advertising

2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை கவனிக்க வைத்தது. சாதியத்துக்கு எதிரான உரையாடலைத் தொடங்குவோம் என்ற கருத்தை முன்னிறுத்தி உருவான அந்த திரைப்படம் பெருவெற்றி பெற்றது. இதையடுத்து மாரி செல்வராஜுடன் இணைந்து தனுஷ் கர்ணன் திரைப்படத்தில் தற்போது பணிபுரிந்து வருகிறார்.

விரைவில் முடியவுள்ள இந்த படத்தை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆதித்ய வர்மா படத்தில் த்ருவ் விக்ரம்மின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை நீலம் புரொடக்‌ஷன் சார்பில் இயக்குனர் ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக சொல்லபடுகிறது.

Published by
adminram

Recent Posts