More

படத்தில் எத்தனை வெட்டுகள்? – மாஸ்டர் சென்சார் முக்கிய தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில், இப்படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இப்படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் லோகேஷ் கனகராஜை மிகவும் பாராட்டினர்களாம். படம் விறுவிறுப்பாக இருப்பதாகவும், இதுவரை வந்த விஜய் படங்களை விட மாஸாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், ரத்தம் தெறிக்கும் அதிரடி சண்டை காட்சிகள் இருப்பதால் யூ/ஏ சான்றிதழை கொடுக்க முன் வந்ததாகவும், படக்குழு யூ சான்றிதழ் கேட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.

படத்தில் 9 இடத்தில் வெட்டு கொடுத்து யூ சான்றிதழ் தருகிறோம் என தணிக்கை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, வெட்டுக்களை லோகேஷ் கனகராஜ் ஏற்பாரா இல்லை யு/ஏ சான்றிதழை வாங்குவாரா என்பது தெரியவில்லை. 

Published by
adminram

Recent Posts