மாஸ்டர் ஃபர்ஸ்ட்லுக் காப்பியா? ஜெட் வேகத்தில் நெட்டிசன்கள்!

Published On: December 31, 2019
---Advertisement---

6f701557854b0806208bfd3e34f9b6b6

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படத்தின் டைட்டில் சற்று முன்னர் ’மாஸ்டர்’ என அறிவிக்கப் பட்டுள்ளது என்பதைப் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வித்தியாசமாக இருப்பதாகவும் விஜய்யின் முகம் தெளிவில்லாமல் இருப்பதாகவும் விஜய் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர் 

இதனை அடுத்து ஒரு சிலர் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு விளக்கம் அளித்தபோது விஜய் வில்லனை ஓங்கி அடித்து இருப்பார் என்றும், அந்த கலக்கத்தில் வில்லனின் பார்வையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் விளக்கமளித்தனர். ஒருசிலரோ இது 3டி போஸ்டர் என்றும் 3டி கண்ணாடி போட்டு பார்க்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இதனையடுத்து தற்போது இதே டைப்பில் அதாவது ’தி மாஸ்டர்’ என டைட்டிலில் ஒரு ஆங்கில திரைப்படம் வெளியாகி இருப்பதாகவும் அந்த படத்தின் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ள விஜய்யின் ‘மாஸ்டர்’ போஸ்டரும் ஒரே மாதிரியாக இருப்பதாக நெட்டிசன்கள் இரண்டு பட போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர் 

இவ்வளவு வேகமாக ஒரு படத்தின் போஸ்டர் காப்பி என்று கண்டுபிடித்த நெட்டிசன்களை பாராட்டுவதா அல்லது படக்குழுவினர்களை விமர்சனம் செய்வதா? என்று தெரியவில்லை

Leave a Comment