">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மியா கலிஃபா ஏலம் விட்ட பொருள் ஒரு லட்சம் டாலருக்கு விற்பனை – சொந்த நாட்டுக்கு உதவி!
போர்னோ நடிகையான மியா கலிபா தனது கண்ணாடியை ஒரு லட்சம் டாலருக்கு ஏலம் விட்டு அதை தனது சொந்த நாட்டு மக்களுக்காக அளித்துள்ளார்.
போர்னோ நடிகையான மியா கலிபா தனது கண்ணாடியை ஒரு லட்சம் டாலருக்கு ஏலம் விட்டு அதை தனது சொந்த நாட்டு மக்களுக்காக அளித்துள்ளார்.
லெபனான் நாட்டைச் சேர்ந்தவர் மியா கலிஃபா. இவர் போர்னோ கிராபி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வந்தார். ஆனால் அவரது மதத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அவர் பார்ன் படங்களில் நடிப்பதைக் கடுமையாக கண்டித்து மிரட்டல் விடுத்தனர். ஆனாலும் தொடர்ந்து நடித்த அவர் ஒரு கட்டத்தில் அந்த துறையை விட்டு விலகினார்.
இந்நிலையில் கடந்த வாரம் லெபனானில் குண்டுவெடிப்பு நடந்து மக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் தன் நாட்டு மக்களுக்கு உதவும் விதமாக, அவர் தன்னுடைய மூக்குக் கண்ணாடியை ஏலம் விட்டுள்ளார். அனைவரும் வாய்பிளக்கும் வகையில் அந்த கண்ணாடி ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது. இந்த தொகையை அப்படியே அவர் மக்களுக்கான நிவாரண உதவிகளுக்காக அளித்துள்ளார்.