More

முதல்முறையாக சென்னை ஏர்போர்ட்டில் இசை விழா! எந்த படம் தெரியுமா?

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இந்த படம் விஜய் நடித்துள்ள ’மாஸ்டர்’ படத்துக்கு போட்டியாக தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது 

Advertising
Advertising

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 13ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் நடைபெற உள்ளதாகவும் இதற்காக விமான நிலைய அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதியை படக்குழுவினர் பெற்றிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 

இந்த இசை விழா குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரும் என தெரிகிறது தமிழ் திரைப்பட உலகில் முதல் முதலாக ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா விமான நிலையத்தில் நடப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது 

Published by
adminram

Recent Posts