நான் இந்து என்பதால் என்னுடன் சக வீரர்கள் உணவருந்த மறுத்தனர் – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா உருக்கம் !

08f1002e1a744a698dd4a5b556202aad

பாகிஸ்தான் சுழல்பந்து வீச்சாளரான டெனிஷ் கனேரியா தன்னோடு உணவருந்த மறுத்த சக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட உள்ளதாக கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் தனிஷ் கனேரியா. சக்லின் முஷ்டாக்குக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்குக் கிடைத்த முக்கியமான சுழல்பந்து வீச்சாளராக கருதப்பட்டார். இந்நிலையில் இந்து மதத்தைச் சேர்ந்த இவர் சக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களால் எவ்வாறு ஒதுக்கப்பட்டார் என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில்டேனிஷ் கனேரியா எவ்வளவுதான் தான் சிறப்பாக விளையாடினாலும் ,அவரை சக வீரர்கள் பாராட்டமாட்டார்கள். மேலும் சில வீரர்கள் அவருடன் ஒன்றாக உணவருந்த மறுத்தனர்.’ எனக் கூறி அதிர்ச்சியை கிளப்பினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தனிஷ் கனேரியா அக்தர் கூறியவை அனைத்தும் உண்மைதான் என்றும் தன்னுடன் உணவருந்த மறுத்த வீரர்களின் பட்டியலை இப்போது வெளியிட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

Related Articles

Next Story