More

இப்போதான் சொல் பேச்சு கேக்குற..? ரசிகரின் டார்ச்சரில் திருந்திய நடிகை!


‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

Advertising
Advertising

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இன்ஸ்டாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பேற்றி வந்த நந்திதா ஸ்வேதாவுக்கு ஹோம்லி லுக் தான் செட் ஆகுது என எல்லோரும் ஃப்ரீ அட்வைஸ் கொடுத்தனர். அதை கேட்டு திருந்திட்டாங்க போல… ஆம், அம்மணி சுடிதாரில் அடக்கம் ஒடுக்கமாக ஹோம்லி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Published by
adminram

Recent Posts