More

மூக்குத்தி அம்மனுக்கு நயன்தாரா போட்ட கண்டிஷன் – உண்மையை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா ஆகியோர் நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்திற்கு ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். மேலும், என்.ஜே. சரவணன் என்பவரோடு இணைந்து இப்படத்தை இயக்கியும் உள்ளார்.

Advertising
Advertising

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐ.சி.கணேசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் ரு.13 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கினால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் இப்படம் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 14ம் தேதி ஹாட் ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

இப்படம் பற்றி கருத்து தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜி ‘இப்படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்க நயன்தாராவை முடிவு செய்தோம். ஆனால், அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அதன்பின் முழுக்கதையும் கேட்டபின் ஒத்துக்கொண்டார். அதற்கு சில நிபந்தனைகள் விதித்தார். நான் விரதம் இருந்தே இப்படத்தில் நடிப்பேன். அதேபோல், படக்குழுவினரும் விரதம் இருக்க வேண்டும். 25 நாட்களுக்குள் என் காட்சிகளை எடுத்துவிட வேண்டும் என்றார். அதை அனைவரும் பின்பற்றினோம். 24 நாட்களில் படப்பிடிப்பை முடித்து விட்டோம். அவரும் மகிழ்ச்சியுடன் எங்களிடமிருந்து விடை பெற்றார்’ எனக்கூறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts