
இயக்குனர் முருகதாஸ் மற்றும் நயன்தாராவுக்கு இடையிலான பிரச்சனை குறித்த கேள்விக்கு முருகதாஸ் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இயக்குனர் முருகதாஸுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் தர்பார் படப்பிடிப்புத் தளத்தில் பிரச்சனை எழுந்ததாகவும் அதனால் நயன் கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்ததாகவும் சொல்லப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக நயன்தாரா அளித்த நேர்காணல் ஒன்றில் ‘நான் கஜினி படத்தில் நடித்தது தவறான் முடிவு’ கூறினார்.
இந்நிலையில் முருகதாஸிடம் நயன்தாரா குறித்து கேள்வி எழுப்பியபோது ‘அவர் சுயமாக உழைத்து முன்னேறி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் ஒரு நடிகை. அவரைப் பற்றி பேசி அவர் பெருமையைக் குறைக்க விரும்பவில்லை’ எனப் பதில் அளித்துள்ளார்.



