More

டாடி உங்களுக்கு மட்டும் ரெண்டா… சியான் மீது கடுப்பில் துருவ்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சியான் விக்ரம். தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனது மகன் துருவுடன் நடிக்க இருக்கிறார். இப்படம் விக்ரமின் 60வது படம். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் துவங்கி இருக்கிறது. விக்ரமிற்கு ஜோடியாக சின்னத்திரையில் இருந்து கோலிவுட் ரூட் பிடித்த வாணி போஜனும், நடிகை சிம்ரனும் இணைந்து இருக்கிறார்கள். மேலும், வில்லன் நடிகரான பாபி சிம்ஹாவும் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படம் பேட்ட படம் போல பழிவாங்கும் கதையாக இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது. தொடர்ந்து, சியான் ஜோடிகளை கன்பார்ம் செய்த படக்குடு துருவின் நாயகியை இன்னும் தேடிக்கொண்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் துருவ் கடுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வளர்ந்து வரும் நடிகரான துருவ் தந்தைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்தில் அவருக்கு இரண்டு ஜோடி என ஏகத்தும் அவர் மீது காண்டாகி இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இப்படத்தினை முடித்து விட்டால் இனி தந்தையோடு நடிக்க மாட்டேன் எனவும் நண்பர்கள் வட்டாரத்தில் துருவ் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

Published by
adminram

Recent Posts