More

அடுத்தடுத்த சிக்கல்.. எப்பதான் துவங்குமோ வலிமை சூட்டிங்!.. காத்திருக்கும் தல ரசிகர்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. போனிகபூர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

Advertising
Advertising

தற்போது படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்த நிலையில், அஜித் இல்லாத சில காட்சிகளை டெல்லியில் எடுக்க படக்குழு திட்டமிட்டிருந்தததாம். ஆனால், டெல்லி அரசு அதற்கான அனுமதியை தரவில்லையாம். எனவே, அடுத்து எங்கு படப்பிடிப்பை நடத்துவது என படக்குழு யோசித்து வருகிறதாம்.

இப்படியே போனால் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல மாதங்களாக வலிமை படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. தற்போது படப்பிடிப்பு துவங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் போனிகபூர் மட்டுமல்ல. தல ரசிகர்களும் சோகமடைந்துள்ளனர்.

Published by
adminram

Recent Posts