More

4 வருஷமாச்சு! – பாகுபலி வசூலை தொட முடியாமல் திணறும் ஹாலிவுட் படங்கள்…

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கு , தமிழ், ஹிந்தி என 3 மொழிகளில் உருவான திரைப்படம் பாகுபலி மற்றும் பாகுபலி 2. இந்த திரைப்படம் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் இந்தியாவில் 9 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. பாகுபலி 2 திரைப்படம் உலகம் முழுவதும் 1700 கோடிகளுக்கும் மேல் வசூலித்தது.

Advertising
Advertising

பாகுபலி 2 இந்தி பதிப்பு மட்டும் ரூ.500 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. பாலிவுட்டில் நேரடி ஹிந்தி படங்களில் எந்த திரைப்படமும் இந்த வசூலை இதுவரை தொட முடியவில்லை. பாகுபலி 2 வெளியாகி 4 வருடமாகி விட்டது. இதுவரை அப்படத்தின் சாதனையை பாலிவுட்டில் எந்த திரைப்படமும் நெருங்கக் கூடவில்லை. அவ்வளவு ஏன்? பாகுபலி முதல் பாகம் வசூல் செய்த ரூ.400 கோடியை கூட எந்த படமும் தொடவில்லை.

பாகுபலிக்கு பின் சஞ்சு திரைப்படம் ரூ.341 கோடி வசூல் செய்தது. அமீர்கானின் டங்கல் திரைப்படம் ரூ. 387 கோடி வசூல் செய்தது. இதுதான் பாலிவுட்டில் சாதனையாக உள்ளது.

Published by
adminram

Recent Posts