சூரியனில் ஓம் ஓசை…. வீடியோ வெளியிட்ட கிரண்பேடி.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பாஜக ஆதரவாளரான கிரண்பேடி தற்போது புதுச்சேரி துணை ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் தனது டிவிட்டர் பக்கத்தில்  சூரியனில் ஓம் எனும் மந்திரம் ஒலிப்பதை நாசா விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர் எனக்கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதைக்கண்டதும் நெட்டிசன்கள் அவரை கடுமையாக திட்டி பதிவுகளை செய்து வருகின்றனர். 

அது கிராபிக்ஸ் செய்யப்பட்ட ஒரு போலி வீடியோ என்பது குழந்தைக்கு கூட தெரியும். ஆனால், ஆளுனர் கிரண் பேடிக்கு தெரியவில்லையேயே என பலரும் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

Published by
adminram