
தினமலரில் பணிபுரிந்து கொண்டிருந்த ரங்கராஜ் பாண்டே தினந்தந்தி கொலைக்காட்சிக்கு வந்த பின்னரே கவனிக்கப்பட்டார். அங்கு அவர் தலைமை செய்தியாளராக உயர்ந்தார். பிரபலங்களை கிடுக்குப்பிடி கேள்விகள் மூலம் திக்கு முக்காட செய்வதில் கில்லாடியாக இருந்ததால் அவரை பலருக்கும் பிடித்துப்போனது. அதேநேரம், பாஜக ஆதரவாளர் போல் அவர் செயல்படுகிறார் என்கிற விமர்சனமும் அவர் மீது உண்டு.
இதன் காரணமாகவே சில மாதங்களுக்கு முன் அவர் தந்தி தொலைக்காட்சியிலிருந்து விலகினார். அதன் பின் அவர் தனியாக தொலைக்காட்சி துவங்குவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், அவர் நியூஸ் 7 தொலைக்காட்சியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது திரைமறைவில் அந்த தொலைக்காட்சியில் அவர் பணிபுரிந்து வருவதாகவும், விரைவில் திரையில் அவர் தோன்றுவார் எனக்கூறப்படுகிறது.



