">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
உன் வேலைய மட்டும் பாரு… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பளார் ரிப்ளை!
வனிதாவின் மறுமணம் குறித்து சொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், “நான் இப்பொழுது தான் இந்த செய்தியை பார்த்தேன். அந்த நபருக்கு ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இன்னும் விவாகரத்து ஆகவில்லை. படிப்பும், புகழ் வெளிச்சம் உள்ளவர் எப்படி இதுபோன்ற ஒரு தவறை செய்ய முடியும் ? அதிர்ச்சியடைந்தேன். வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம் முடியும் வரை அவர் ஏன் காத்திருந்தார். ஏன் திருமணத்தை நிறுத்தவில்லை ? என்று கேள்வி எழுப்பி இரண்டு தரப்பிலும் உள்ள குற்றத்தை குறித்து ட்விட் போட்டிருந்தார்.
வனிதாவின் இந்த பதிலுக்கு ரிப்ளை செய்த லட்சுமி ராமகிருஷ்ணன், “முறைப்படி விவாகரத்து பெறாமல் நடைபெறும் மறுமணங்களைக் குறித்த என் கருத்தை வெளிப்படுத்தினேன். கற்பழிப்பு, சமீபத்திய தந்தை – மகன் மரணம் குறித்து நான் கருத்தை வெளிப்படுத்தும்போது இத்தனை எதிர்வினைகள் பதில் எனக்கு கிடைக்கவில்லை என்றார்.
அதே சமயம் உங்களுடைய தேர்வு குறித்து நான் கேள்வி எழுப்பவில்லை. ஒருவர் சமூக நடைமுறையை, சட்டத்தை மீறும்போது சமூகமும் நானும் அந்த முடிவை தட்டி கேட்கிறோம். சட்டத்தை மீறி விவாகரத்து பெறாமல் நடைபெறும் மறுமணம் என்கிற அந்த முடிவை மட்டுமே கேட்டோம் என்றார். இந்த விவகாரம் தற்ப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Can we stop discussing #VanithaPeterpaulWedding pls I tweeted my opinion because of the need to raise voice against remarriage without legal divorce. When I touch upon a more important issue like abuse, rape or the recent death of father & son, I don’t get so much response!
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) June 29, 2020