
கன்னட படமான கேஜிஎஃப் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொழிமாற்றம் செய்யப்பட்டு ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்று கன்னட திரையுலகில் ரூ.100 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.
அதன் தொடர்ச்சியாக கேஜிஎஃப்-2 உருவாகி வருகிறது. தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிச. 21ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இந்த போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர்.



