பெற்றோர் என்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள்… ஆனால் நான் ? – தற்கொலை செய்துகொன்ட பெண்ணின் உருக்கமான கடிதம்

Published On: December 29, 2019
---Advertisement---

164bbc0f38b091a6383219710bfaacdb

சென்னை திருவொற்றியூரில் கல்லூரித் தேர்வை ஒழுங்காக எழுதாத பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் ரெயில் நிலையம் சாலையில் வசிக்கும் சாமுவேல். என்பவரின் மகள் கீர்த்தனா. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று தேர்வெழுத சென்ற இவர் வீட்டுக்கு வந்து அறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதையடுத்து அறைக்கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதைப்பார்த்து அலறிய அவரது பெற்றோர் மகள் எழுதிய கடிதத்தைப் பார்த்துள்ளனர். அதில் ‘ எனது தாய் தந்தையர் என்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். ஆனால் நான் சரியாகப் பருவத் தேர்வை எழுதவில்லை. என் சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சிறிய விஷயத்துக்காக மாணவி தற்கொலை செய்துகொண்டது அவரது பெற்றோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலைக் கைப்பற்றிய போலிஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

Leave a Comment