">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பால் திரிஞ்சிப் போச்சு… முதல்வரிடம் புகார் தெரிவித்த எஸ்.வி.சேகர் – கலாய்க்கும் நெட்டிசன்கள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டிவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் குறையை அல்லது புகாரை அவரிடம் தெரிவித்தால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களின் தொலைப்பேசி எண்ணை வாங்கி குறைகளை போக்கி வருகிறார்.�
இந்நிலையில், நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் ‘இன்று காலை 13 பால் பாக்கெட் வாங்கினோம். அதில் 9 பாக்கெட்டுகளின் பால் காய்ச்சும் போது திரிந்து விட்டது. வீட்டில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். நான் என்ன செய்வது?’ எனக்கூறு முதல்வரின் டிவிட்டர் பக்கத்திற்கு டேக் செய்திருந்தார்.
இதைகண்ட நெட்டிசன்கள் பால் திரிஞ்சி போனதுக்கெல்லாம் முதல்வரிடம் கூறுவீர்களா? என அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் @AmitShah உடனடியாக தலையிட்டு, தமிழக ஆளுனரிடம் அறிக்கை கேட்க வேண்டும்.
தேவைப்பட்டால், மத்திய அரசு 356 பிரிவை பயன்படுத்தவும் தயங்கக் கூடாது. pic.twitter.com/kRXLOV2WR8
— Savukku_Shankar (@savukku) April 26, 2020