More

பிரபாஸ் படத்தின் நடிகையின் பிறந்தநாள் – படக்குழு அளித்த தரமான பரிசு!

நடிகர் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் படத்தில் பூஜாவின் கதாபாத்திரத்தை வெளியிட்டுள்ளது படக்குழு.

Advertising
Advertising

சாஹோ படத்தின் தோல்விக்குப் பின் மிகப்பெரிய வெற்றிக் கொடுக்க வேண்டும் எனபதற்காக பிரபாஸ் இப்போது ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க ராதா கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த பிரம்மாண்டமான காதல் படத்துக்கு  இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கதாபாத்திர அறிமுகம் செய்யப்பட்டது. இந்த படத்தில அவர் பிரேரனா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் அவரது புகைப்படம் ஒன்றும் வெளியானது.

Published by
adminram