யாரிடம் இப்படி மன்னிப்பு கேட்டதில்லை… ரஜினியிடம் கேட்டேன் – பிருத்விராஜ் பேட்டி

Published On: December 26, 2019
---Advertisement---

7ecba5c09e6c93e6b4ffdb9ff42e9554

மலையாளரத்தில் வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படம் மூலம் அவர் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.  இப்படத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் அங்கு ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.  இப்படத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

இந்நிலையில், ‘டிரைவிங் லைன்சஸ்’ படத்தின் புரமோஷன் தொடர்பான செய்தியாளர்களிடம் பேசிய பிரித்திவிராஜ் ‘லூசிஃபர் படத்தை முடிக்கும் நிலையில் ரஜினிகாந்தின் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. ஆனால், ‘ஆடுஜீவிதம்’ படத்தில் நடிக்க நான் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியிருந்ததால் என்னால் அப்படத்தை இயக்க முடியவில்லை. எனவே, ஒரு ரஜினிக்கு ஒரு நீண்ட மன்னிப்பு கடிதம் எழுதி அனுப்பினேன். என் வாழ்வில் நான் யாரிடமும் இப்படி மன்னிப்பு கேட்டதில்லை. அந்த வாய்ப்பை தவறவிட்டதில் எனக்கு வருத்தம் உண்டு’ எனக்கூறினார்.

தமிழ் சினிமாவில் பெரிய இயக்குனர்கள் இருக்கும் போது பிரித்திவிராஜுக்கு ரஜினி படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment