
‘துப்புனா தொடச்சுக்குவேன்’ எனக்கூறி தமிழக மக்களை சிரிக்க வைத்தவர் நாஞ்சில் சம்பத். அரசியல் மேடைகளில் சிறப்பாக பேசக்கூடிய அவர் திமுக, மதிமுக, அதிமுக, அமமுக என பல கட்சிகளுக்கு சென்று அதன்பின் அரசியலில் இருந்து விலகினார்.
தற்போது ஒரு செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் வழக்கம் போல் சர்ச்சையாக பேசியுள்ளார். வைகோ முத்லவர் ஆவதை தடுத்தவர் ரஜினி என அரசியல் விமர்சகர்கள் இப்போதும் சொல்லுகிறார்களே? என நிருபர் கேட்க ‘அவரின் படமே ஓடுவதில்லை’ என நாஞ்சில் சம்பத் கூறினார். அதற்கு நிருபர் ‘ அவர் படமெல்லாம் நன்றாகத்தானே ஓடுகிறது எனக்கூற, அதற்கு ‘ ஒரு மயிறும் ஓடல’ என சம்பத் பதிலளித்தார்.
அவரின் இந்த பேட்டி ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று இரவு “7:30” pic.twitter.com/lBHA30C8Vd
— Madan Ravichandran (@MadanRavichand4) December 21, 2019



