ரமணா படத்தை மறுத்த ரஜினிகாந்த்... என்ன இருந்தாலும் சூப்பர்ஸ்டார் செய்ததும் சரிதான்...!
ஏ.ஆர்.முருகதாஸ் அஜீத்தை வைத்து தீனா படம் பண்ணினார். மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அவருக்கு ரஜினியை வைத்து படம் பண்ண ரொம்ப நாளா ஆசை. அவர் ரஜினிக்கிட்ட கதை சொன்னார். அது அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
ஆனா அந்தப் படத்தோட கிளைமாக்ஸ் ரசிகனுக்குப் பிடிக்குமான்னு அவருக்கு சந்தேகம். அவரைப் பொருத்த வரைக்கும் தன்னோட ரசிகனுக்கு எது பிடிக்கும், பிடிக்காதுங்கற விஷயம் ரொம்ப நல்லாவே தெரியும்.ரசிகன் எந்த இடத்துல கைதட்டுவான், விசில் அடிப்பான்கறது கூட தெரியும்.
அதனால தன்னோட படத்துல அவனுக்கான காட்சிகளைத் தான் வைப்பார். ஆனா இந்தப் படத்துல அப்படி ஒரு கிளைமாக்ஸ் இருந்தா அதுவும் ரஜினி இறந்துடற மாதிரி சீன் இருந்தா ரசிகன் கண்டிப்பா ஒத்துக்கவே மாட்டான்னு தான் அதை மறுத்தார். அதிசயபிறவி படத்துல கூட ரஜினி இறந்ததும் இன்னொரு ரஜினி வந்து படம் முழுக்கக் கலகலப்பூட்டுவார்.
ரமணா தான் அந்தப் படம். அது மிகப்பெரிய வெற்றிப்படம். படத்துல கிளைமாக்ஸ்ல விஜயகாந்த் இறந்துடுவாரு.அதனால தான் ரஜினி அதுல நடிக்கல.
தெலுங்குல இதே படத்தை முருகதாஸ் எடுக்கிறார். அவர் ரஜினியிடம் கேட்கிறார். தெலுங்கில் யாரை வைத்து எடுத்தால் ஹிட் ஆகும்னு கருத்து கேட்க, சிரஞ்சீவியைச் சொல்கிறார். அதன்பிறகு முருகதாஸ் அதே போலவே தெலுங்கை வைத்து எடுத்துள்ளார்.
அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு முருகதாஸ் ரஜினிக்காக கதை எழுதினார். அது தான் தர்பார் படம். படத்தின் பெயரே பெரிய அளவில் ஈர்க்க வில்லை. அந்தப் படத்தின் போது கோவிட்டும் தொடங்கியதால் படத்திற்கு பெரிய அளவில் வசூல் இல்லை. மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் கே.சங்கர் தெரிவித்துள்ளார்.
ரமணா படம் விஜயகாந்துக்கு மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் கதையும் ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாகவே இருந்தது. விஜயகாந்தின் திரை உலக வாழ்விலே ஒரு பெரிய மைல்கல்லாக அமைந்த படமும் இதுதான். படத்தில் விஜயகாந்த் பேசும் ஒவ்வொரு வசனமும் தெறிக்கவிடும்.