More

சினிமாவை செழிப்பாக்கிய இராமநாதபுரம் கலைஞர்கள்

தமிழ்நாட்டில் உள்ள இராமநாதபுரம் மாவட்டம் மற்ற மாவட்டங்களை போல் செழிப்பான மாவட்டம் கிடையாது. ஒரு காலத்தில் தென்மாவட்டங்களிலேயே பெரிய மாவட்டமாக இருந்த மாவட்டம் இது. விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் என மூன்று மாவட்டங்களும் சேர்ந்து இராமநாதபுரம் மாவட்டமாக இருந்தது. 

Advertising
Advertising

இந்த மாவட்டத்தின் சிறப்பு கடற்கரை மற்றும் மீன்பிடித்தொழில் தானே தவிர மற்ற இயற்கை வளங்கள் அதிகம் இங்கு இருக்காது. முன்பெல்லாம் சரியாக மழை எல்லாம் இருக்காது அது போன்ற காரணத்தால் இது வறண்ட மாவட்டம் வானம் பார்த்த பூமி என வர்ணிக்கப்படுவதுண்டு.

தற்போது எல்லாம் அப்படி இல்லை மாறி வரும் நவீன யுகத்தில் ஓரளவு வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால் வறண்டு போன அந்த காலத்திலேயே இந்த மாவட்டத்தில் இருந்து பிழைக்க சென்று சினிமாவின் தூண் போல சில கலைஞர்கள் இருந்தார்கள் தற்போதும் இருக்கிறார்கள் அவர்களை பற்றி பார்க்கவே இந்த பதிவு.

சினிமா கலைஞர்களில் சிவாஜிக்கு அடுத்து நடிப்பில் வல்லவராக சொல்லப்படும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிதான். இராமநாதபுரத்தில் உள்ள சேதுபதி ராஜா அரண்மணையில் உள்ள ஒரு கட்டிடத்த்தில் தான் கமல்ஹாசன் பிறந்ததாக சொல்லப்படுவதுண்டு. கமல் சிறுவயதில்பரமக்குடி ரவி என்ற தியேட்டரில் எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரன் படத்தை அடிக்கடி பார்த்து ரசிப்பாராம் கமல். பின்பு அவர்கள் குடும்பம் சென்னை வர கமல்ஹாசன் சினிமாவில் வளர்ந்தது எல்லாம் ஊரறிந்த கதை.

அவரின் விக்ரம், அந்த ஒரு நிமிடம், சிங்காரவேலன் உள்ளிட்ட படங்களில் அவர் சொந்த ஊர் பெயரை அடிக்கடி பயன்படுத்தி இருப்பார்.

இது போல் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும் ரஜினி நடித்த தர்மயுத்தம் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கிய சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்த இயக்குனர் ஆர்சி சக்தியும் இம்மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள புழுதிக்குளம் என்ற ஊரை சேர்ந்தவர் இவர்.

சினிமாவில் எந்த ஒரு குணச்சித்திர வேடம் என்றாலும் சிறப்பான முறையில் நடிக்க கூடிய நடிகர் ராஜ்கிரண் இந்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்தான்..இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் இவர். இஸ்லாமியரான இவர் அந்த காலம் முதல் படம் டிஸ்ட்ரிபியூஷன் செய்து பின்பு ரெட்சன் ஆர்ட் கிரியேசன்ஸ் என பட நிறுவனம் வைத்து அதன் மூலம் ராசாவே உன்னை நம்பி, என்னப்பெத்த ராசா,உள்ளிட்ட படங்களை தயாரித்து அந்த நிறுவனம் மூலமாகவே என் ராசாவின் மனசிலே படத்தையும் தயாரித்தவர். அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இவர்.

இயக்குனர் கே.எஸ் அதியமான் இவர் தொட்டாச்சிணுங்கி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் மூலமாக உச்சம் தொட்டவர். தலைமுறை, தூண்டில் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.

எந்த வேடம் என்றாலும் ஒரு கை பார்ப்போம் என வித்தியாசமான வேடங்களில் வெளுத்துக்கட்டும் நடிகர் விக்ரமின் சொந்த ஊர் இராமநாதபுரம் பரமக்குடிதான். கமல் பிறந்த மண்ணில் பிறந்தவர் என்பதால் கமல் போல இவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகராக திகழ்கிறார் போலும்.

சினிமாவில் மிகப்பெரிய காமெடி கலைஞராக கால் நூற்றாண்டுக்கும் மேல் கோலோச்சி வருபவர் நடிகர் செந்தில். இவரும் கவுண்டமணியும் சேர்ந்த நடித்த காமெடி கூட்டணி பெரும் வெற்றிக்கூட்டணி என்பது அனைவருக்குமே தெரியும். இவரின் சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள இளஞ்செம்பூர் கிராமம் ஆகும். சினிமா மீது உள்ள ஆர்வத்தில் ஒரு குக்கிராமத்தில் இருந்து சென்னை சென்ற செந்தில் சினிமாவை கலக்கியது ஒரு பெரும் வரலாறு.

நடிகரும் பிரபல ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் இவரும் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சார்ந்தவர்தான்.

சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பிறந்தது சென்னை என்றாலும் இவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரின் பூர்விகம் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகில் உள்ள பாம்பன் கிராமம் ஆகும். விஜய்யின் சொந்த ஊர் என்று கூட இதை சொல்லலாம்.

தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் வேலா ராமமூர்த்தியும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநாழி கிராமம் ஆகும்.

எந்த இயற்கை வளங்களும் தொழில் வளர்ச்சியும் இல்லாமல் ஒரு பின் தங்கிய மாவட்டத்தில் இருந்து இவ்வளவு கலைஞர்கள் சினிமாவுக்கு சென்று அவர்கள் சினிமாவின் வேர்களாக இருப்பதுதான் சிறப்பு.

Published by
adminram

Recent Posts