சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் பிரச்சினைக்கு ஃபுல் ஸ்டாப் வச்ச ராஷ்மிகா.. நல்ல வேளை

by ராம் சுதன் |

அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த ப்ராஜெக்ட் மீது ரசிகர்களின் பார்வை திரும்பி இருக்கிறது. அமரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைத்து தரப்பினருக்கும் சிவகார்த்திகேயன் மீது ஒரு தனி மரியாதையே பிறந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாகவே தன்னை பிரதிபலித்துக் காட்டினார் சிவகார்த்திகேயன்.

ஒட்டுமொத்த இந்தியாவுமே பெருமைப்படும் விதமாக அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு சிறப்பாக அமைந்திருந்தது, இந்த நிலையில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு அவருடைய ப்ராஜெக்ட் என்னென்ன என்பதை பற்றிய தகவல் தான் சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றது, ஏற்கனவே ஏஆர் முருகதாசுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படம் முடியும் தருவாயில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் சுதா கொங்கராவுடன் அவர் நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் தான். ஆனால் அதற்குள் சிவகார்த்திகேயனுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் சில பல கருத்து வேறுபாடுகள் எழுந்ததாகவும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மாட்டார் என்றும் பல வதந்திகள் எழுந்தன.

ஆனால் நிச்சயமாக சுதா கொங்கராவுடன் இணைந்து சிவகார்த்திகேயன் அந்த படத்தில் பணியாற்ற இருக்கிறார் என தெரியவந்துள்ளது. இதற்கிடையில் நீண்ட நாளுக்கு முன்பாகவே சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயன் காம்போவில் மற்றும் ஒரு திரைப்படம் வர இருப்பதாக தகவல் வெளியானது. அதற்கான பூஜையும் போடப்பட்டது. இந்த நிலையில் சிபிச் சக்கரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா ஆகிய இரு படங்களும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட போவதாகவும் கூறப்பட்டது.

இதில் இருக்கிற ஒரு பிரச்சனை என்னவெனில் சுதா கொங்கரா இயக்கும் படத்திற்கு சிவகார்த்திகேயன் பிரென்ச் பியர்டு மாதிரி தாடி வைக்க வேண்டும். ஆனால் சிபி சக்கரவர்த்தி, ஏ ஆர் முருகதாஸ் இவர்கள் இயக்கும் படத்திற்கு சாதாரண கெட்டப் இருந்தால் போதும் என்ற காரணத்தினால் பிரென்ச் பியர்ட் தற்போது வைக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என சிவகார்த்திகேயன் சொல்லியிருக்கிறார் .

இதற்கு சுதா கொங்கரா கொஞ்சம் கோபம் அடைந்ததாக தகவல் வெளியானது. இந்த பிரச்சனை இப்படி இருக்க இன்று வெளியான தகவலின் படி சிபி சக்கரவர்த்தி இயக்கப் போகும் படம் மார்ச் மாதம் தள்ளிப் போக இருக்கிறதாம். அதற்கு காரணம் அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா தான் என்று தெரியவந்துள்ளது. ஏனெனில் மார்ச் வரைக்கும் ராஸ்மிகா மிகவும் பிசியாக இருப்பதினால் தற்போது தன்னால் கால்ஷீட் தர இயலாது.

மார்ச் மாதத்திற்கு பிறகு தான் கால்ஷீட் தர முடியும் என கூறியதனால் சிபி சக்கரவர்த்தி படம் மார்ச் மாதத்திற்கு தள்ளிப் போக வாய்ப்பு இருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது. அதனால் சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் திரைப்படம் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிகிறது.

Next Story