விசிக உடன் கூட்டணியா? கண்டிப்பா ஜெயிப்பாரு.. வழக்கம்போல மாட்டிக்கொண்ட எஸ்ஏசி

by ராம் சுதன் |

நடிகர் விஜய் இப்போது ஒரு புதிய பரிமாணத்தை எடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அரசியல் களத்தில் சும்மா பாய்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். விஜயால் இந்தளவு பேச முடியுமா என அனைவரும் வாயடைத்து போயிருக்கின்றனர். ஏனெனில் சூட்டிங் சமயத்திலேயே அவருடைய காட்சிகள் முடிந்ததும் யாருடனும் அதிகமாக பேசமாட்டார் விஜய் என்றுதான் கேள்வி பட்டிருக்கிறோம்.

அதனால்தான் அவர் அரசியலுக்கு வந்ததும் விஜய் கொஞ்ச நாளில் மீண்டும் சினிமாவிற்கே போய்விடுவார் என்று விமர்சித்து வந்தனர். ஆனால் மாநாட்டில் அவருடைய பேச்சு மற்றும் சமீபத்தில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டில் அவர் பேசிய பேச்சு என பார்க்கும் போது வெற்றியோ தோல்வியோ அரசியலில் இறங்கியாச்சு. இனி பின் வாங்க போவதில்லை என்ற முடிவோடுதான் வந்திருக்கிறார் விஜய் என்று தெரிகிறது.

அதுவும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பற்றி பேசியதுதான் பெரும் பேசு பொருளாக மாறியது. குறிப்பாக விசிக வுடன் கூட்டணி வைக்க இது ஒரு ஆரம்பப்புள்ளியா என்று கூட கூறிவந்தார்கள். இந்த நிலையில் விமான நிலையத்தில் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் விஜயின் அரசியல் எப்படி இருக்கிறது என்று கேட்டனர்.

கண்டிப்பா ஜெயிப்பாரு.. அரசியல் நகர்வும் சூப்பராக இருக்கிறது என்று பதில் அளித்தார் எஸ்.ஏ. சந்திரசேகர். மேலும் விசிக வுடன் கூட்டணி அமைப்பாரா என்றும் எஸ்.ஏ.சியிடம் கேட்டனர். அதற்கு மிக அமைதியாக அந்த கேள்வியை கடந்து சென்றார் எஸ்.ஏ.சி. ஆனால் விடாமல் துரத்திய பத்திரிக்கையாளர்கள் அம்பேத்கர் புத்தக மாநாட்டில் விஜய் பேசிய கருத்தை பற்றி கேட்டனர்.

அதற்கு எஸ்.ஏ.சி ‘ நான் இப்போ வேறொரு விஷயமா வந்திருக்கிறேன். அரசியல் பற்றி பேசுகிற இடம் இல்லை’ என்று கூறிவிட்டு சென்றார். தனியாக பத்திரிக்கையாளர் சந்திப்பு வைக்கும் போது பேசிக் கொள்ளலாம் என்றும் கூறிவிட்டு சென்றார்.

Next Story