சச்சினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு – சிவசேனா அதிரடி மாற்றம் !

Published On: December 26, 2019
---Advertisement---

7e40541061cac5e7be9fad01f549f824

மகாராஷ்டிரா மாநில அரசான சிவசேனா கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை குறைத்துள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 97 முக்கிய புள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு மறுபரிசீலனை செய்துள்ளது மாநில அரசு. உளவுத் துறை அளித்த பரிந்துரைகளின் பேரில் பாதுகாப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட எக்ஸ் பிரிவு பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அவருடன் எந்நேரமும் இருந்த காவலர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் வெளியில் செல்லும் போது பாதுகாவலர் வேண்டுமானால் பாதுகாப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கும் அன்னா ஹசாரேவுக்கும் வழங்கப்பட்ட  ஒய் ப்ளஸ் பாதுகாப்பு இசட் ப்ளஸ் பாதுகாப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Comment