இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் விளையாடுவதறகாக 26 கிலோ எடையை 4 மாதத்தில் குறைத்துள்ளார்.
இந்தியா டென்னிஸ் நாயகியான சானியா மிர்ஸா திருமணமாகி குழந்தை பிறந்தபின்னர் டென்னிஸ் விளையாட்டுக்கு 2 ஆண்டுகள் இடைவெளி விட்டு இருந்தார். இப்போது மீண்டும் களத்துக்கு தயாராகி வருகிறார். ஜனவரி மாதம் நடக்க இருக்கும் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவர் இரட்டையர் பிரிவில் கலந்துகொள்ள இருக்கிறார்.
இதற்காக அவர் கடந்த 4 முதல் 5 மாதங்களாக கடுமையான உடல் பயிற்சிகளை மேற்கொண்டு 26 கிலோ எடையை குறைத்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர் ‘ எனக்கு உறுதுணையாக இருந்த எனது தாய் மற்றும் சகோதரிக்கு நன்றி. ஒலிம்பிக் போட்டிகள் எனது மனதில் உள்ளன. ஆனால் அவை எனது உடனடி இலக்கு அல்ல’ எனத் தெரிவித்துள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…