
தன் மகள் வரலட்சுமி பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த போது அவருக்கு உதவாதற்காக இப்போது வருந்துவதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சரத்குமார் கதாநாயக வேடங்கள் எதுவும் வராததால் இப்போது குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வரிசையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தன் மகள் வரல்ட்சுமி, மனைவி ராதிகா ஆகியோரோடு பிறந்தநாள் பராசக்தி எனும் படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தன் மகள் வரலட்சுமி முதன் முதலில் நடித்த போடா போடி திரைப்படம் சிக்கலில் மாட்டி சில ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த போது அவருக்கு நான் சிபாரிசு செய்து பட வாய்ப்புகள் வாங்கி தராதது குறித்து இப்போது வருந்துவதாக தெரிவித்துள்ளார்.



