அரசியலில் என்ட்ரி ஆனதும் இவ்வளவு ஆவேசமா? விஜயை விளாசிய கட்டப்பா வாரிசு

இன்று யாருமே எதிர்பார்க்காத வகையில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அவர் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். சத்யராஜை பொறுத்த வரைக்கும் அவர் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை திராவிட கொள்கை மற்றும் பெரியார் கொள்கைகளை பற்றி பேசி வருபவர். பெரியாரின் கொள்கைகளால் பெரிதளவு ஈர்க்கப்பட்டவர்.
இதனாலேயே சத்யராஜை திமுகவின் ஆதரவாளர் என்றும் கூறி வந்தனர். இந்த நிலையில் அவருடைய மகள் திவ்யாவும் தன்னை இப்போது திமுகவில் இணைத்துக் கொண்டார். திமுகவில் இணைந்ததுமே முதல் வேலையாக நடிகர் விஜயின் அரசியல் பற்றிய கருத்தை மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார் திவ்யா சத்யராஜ். அதாவது விஜய் கள அரசியலுக்கு வரவில்லை.
புகைப்படம் பதிவிட்டு மட்டுமே அரசியல் செய்ய முடியாது. மக்களுக்கு நேரடியாக வேலை செய்ய வேண்டும். விஜய் வெறும் புகைப்பட அரசியலை மட்டுமே நடத்துகிறார் என கடுமையாக விளாசி இருக்கிறார் சத்யராஜின் மகள் திவ்யா. ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வந்ததும் அவருடைய முதல் மாநாட்டில் தன்னுடைய எதிரி திமுக என்று பகிரங்கமாக கூறியிருந்தார்..
இந்த நிலையில் திமுகவில் தன்னை இணைத்ததுமே விஜய்க்கு எதிராக தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார் திவ்யா சத்யராஜ். திவ்யா சத்யராஜ் அடிப்பையில் ஒரு ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். சோசியல் ஆக்டிவிட்டிஸிலும் ஆர்வமாக இருப்பவர். வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் திவ்யா சத்யராஜ் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் விஜயை பொறுத்தவரைக்கும் தன்னை பற்றியும் தன் கட்சியை பற்றியும் யார் என்ன சொன்னாலும் அதற்கு உடனடியாக ரிஃபிளக்ட் பண்ண வேண்டாம் என்று அவருடைய தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். எதையும் தேர்தலில் சந்திப்போம் என்ற குறிக்கோளோடு இருக்கிறார் விஜய். தற்போது விஜய் பரந்தூரில் நடக்கும் போராட்டத்தில் மக்களை சந்திப்பதற்காக சென்றிருக்கிறார். அதனால் விஜய்க்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.