ஏழு வருடங்களுக்கு பின் எடுத்த செல்பி: கவின் டுவிட்

Published On: December 26, 2019
---Advertisement---

dde295b37adae28c3feed52ce1cee379

நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தபோது அவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்தது. குறிப்பாக கவின்-லாஸ்யா காதலுக்கு கவின் ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்தனர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து இருவரும் வெளியே வந்ததும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருமே காதல் குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது அந்த நிகழ்ச்சியை பரபரப்பை ஏற்படுத்திவே இருவரும் காதல் நாடகம் ஆடியதாக தற்போது கவினை பாராட்டி அதேரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் 

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் திரை உலகிலிருந்து வாய்ப்புகள் குவியும் என்று கமல் உள்பட பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற ஆரவ், ரித்விகா, முகின் ஆகியோர்களே வாய்ப்பில்லாமல் இருப்பதுதான் உண்மையான நிலையாக உள்ளது. இந்த நிலையில் கவினுக்கும் இன்னும் எந்தவித பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை

இந்த நிலையில் சற்று முன்னர் கவின் தனது டுவிட்டர் பக்கத்தில் ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற பாலாவுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். பாலாவுடன் ஏழு வருடங்களுக்கு பின் தற்போது தான் அவருடன் செல்பி புகைப்படம் எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

Leave a Comment