
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. ஆனால், அதை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார். எல்லொரும் அவரை தங்கள் வீட்டு பெண்ணாக கருதும் அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார். ஒருபக்கம் திரைப்படங்களிலும் பட துவங்கியுள்ளார்.

இந்நிலையில், சாந்தனு பாக்கியராஜ், அதுல்யா ரவி நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் தனது நண்பர் ஷாம் விஷாலுடன் இணைந்து, ஷிவாங்கி ‘டாக்கு லெஸ்ஸூ வொர்க் மோரு’ எனும் பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் வரிகள் வீடியோ தற்போது யுடியுப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார்.
இப்பாடல் வெளியாகி ஒரேநாளில் 8 லட்சத்து 81 ஆயிரம் பார்வைகளை பெற்றுள்ளது. 96 ஆயிரம் பேர் இப்பாடலை லைக் செய்துள்ளனர்.





