கூலி படத்தில் ரஜினிக்கு மகளா? யாரு சொன்னது? என்ன கேரக்டர் தெரியுமா சுருதிஹாசனுக்கு?

கூலி: ரஜினிகாந்தின் 171 வது படமாக தயாராகி வருகிறது கூலி திரைப்படம். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். தங்க கடத்தல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருவதால் மீண்டும் ரஜினியை ஒரு மாஸ் ஹீரோவாக இந்த படத்தில் பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பேன் இந்தியா திரைப்படம்: படத்தின் டீசர் மற்றும் போஸ்டரை பட குழு ஒவ்வொன்றாக வெளியிட்டது. அது போக படத்தில் நடிக்கும் நடிகர்களின் கேரக்டர்களையும் ஒவ்வொன்றாக வெளியிட்டது. இதில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சவ்பின், தமிழில் சத்யராஜ், கன்னடத்தில் உபேந்திரா என ஒரு பேன் இந்தியா படமாகவே கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நடிகை சுருதிஹாசனும் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படி ஒரு கேரக்டரா?: சமீப காலமாக இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக சுருதிஹாசன் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதுதான் இல்லை. சத்யராஜுக்கு மகளாகத்தான் இந்த படத்தில் சுருதிஹாசன் நடிக்க இருக்கிறார். ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் இந்த படத்தில் நடிக்கிறார். அது மட்டுமல்ல கூலி திரைப்படத்தில் சுருதிஹாசனுக்கு ஒரு வெயிட்டான கதாபாத்திரமாம்.
உறுதியுடன் இருக்கும் சுருதிஹாசன்:இந்த படத்தில் கமிட்டானதும் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் கூலி படம் வெளியான பிறகு இந்த கேரக்டரின் முக்கியத்துவம் எப்படி வரவேற்பை பெறுகிறது என்பதை பார்த்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கிறேன் என சுருதிஹாசன் உறுதியோடு இருக்கிறாராம். விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தில் கூட சுருதிஹாசன் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது .
ஆனால் அது இப்போது பேச்சுவார்த்தையில் மட்டும்தான் இருக்கிறதாம். உண்மையிலேயே கூலி படக் குழு தான் இந்த மாதிரி ஒரு ஆலோசனையில் இருக்கிறார்களாம் .இது இன்னும் சுருதிஹாசனின் காதுக்கு போய் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .ஒருவேளை அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு நம்மை தேடி வருகிறது என்று தெரிந்தால் கூட கூலி திரைப்படம் வெளியான பிறகு தான் நடிப்பேன் என்று சொல்லுவாரோ என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கு கூலி திரைப்படத்தை எதிர்பார்த்து சுருதிஹாசன் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.