More

விஜய்க்கு சொன்ன கதையில் சிம்பு – யு டர்ன் அடித்த சுதா கொங்கரா !

விஜய்க்கு சொல்லி இருந்த கதையில் அவர் நடிக்க தயங்குவதால் சிம்புவை வைத்து அந்த படத்தை சுதா கொங்கரா இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertising
Advertising

இறுதிச் சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய படங்களின் இயக்குனர் சுதா கொங்கரா விஜய்க்கு ஒரு கதை சொல்லியுள்ளார். முதலில் அந்த கதை பிடித்த விஜய் அந்த படம் தொடங்க எப்படியும் நவம்பர் மாதம் ஆகிவிடும் என்பதால் இப்போது தயக்கம் காட்டுகிறாராம்.

இதற்கிடையில் அவர் முருகதாஸை சந்தித்து கதை கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் இணையும் படம் துப்பாக்கி 2 ஆக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய்க்கு சொன்ன கதையை சிம்புவை வைத்து இயக்க சுதா கொங்கரா முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மாநாடு படம் முடிந்ததும் இந்த படம் ஆரம்பிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Published by
adminram

Recent Posts