More

முன்னாள் காதலியின் முதுகில் படுத்து தூங்கும் சிம்பு!

சிம்பு ஹன்சிகா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாலு. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் பரவின. ஆனால் திடீரென இருவரது இந்த காதல் பிரேக் அப் ஆகிய இருவரும் பிரிந்துவிட்டனர்

Advertising
Advertising

இதன் பின் கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் இணைந்து நடக்காத நிலையில் தற்போது ஹன்சிகா நடித்து வரும் 'மஹா' என்ற படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். அவரது காட்சிகள் குறித்து படப்பிடிப்பு சமீபத்தில் படமாக்கப்பட்டது 

இந்த நிலையில் 'மஹா' படத்தின் குழுவினர்கள் சற்று முன்னர் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் ஹன்சிகாவின் முதுகில் சிம்பு படுத்து தூங்குவது போல் உள்ளது. இந்த போஸ்டரை சிம்பு மற்றும் ஹன்சிகா ரசிகர்களை கவர்ந்துள்ளது சமூக வலைதளங்களில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது

சிம்பு, ஹன்சிகா, ஸ்ரீகாந்த், சனம் ஷெட்டி, தம்பி ராமையா, கருணாகரன், மகத் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஜமீல் இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசையில் மதி ஒளிப்பதிவில் ஜான் ஆப்ரஹாம் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை மதியழகன் என்பவர் தயாரித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts