அமரன் மொத்த டீமும் பிளாப் தான்... அப்படின்னா படத்தோட கதி...?! இதுக்குத் தானா இவ்ளோ பில்டப்பு..!
உலகநாயகனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ்சின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் அமரன். இந்தப் படத்தின் நிலை என்ன என்பதைப் பற்றி பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி இவ்வாறு தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
சேட்டிலைட் டிஜிட்டல் நிறுவனம் மொத்தமாகவே தமிழ்சினிமாவைப் பாதிச்சிருக்கு. அமரன் படத்துக்குன்னு மட்டும் சொல்ல முடியாது. அதே நேரம் சிவகார்த்திகேயனுக்குன்னு சேட்டிலைட் பிசினஸை சொல்ல முடியாது. எப்பவுமே இங்க காம்பினேஷனுக்குத் தான் வேலை. சிவகார்த்திகேயன் அமரன் படத்துல நடிக்காரு.
டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி. அவரும் பிளாப் கொடுத்த டைரக்டர். ஆனால் இந்தப் படத்தை ராஜ்கமல் தயாரிப்பதால் இந்தப் படத்திற்கு ஒரு வேல்யு இருக்கு. அடுத்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் ஜெயிக்கும் என்பதாலும் அதற்கு ஒரு வேல்யு இருக்கும். அதே நேரத்துல இவர் புதுமுக இயக்குனரிடம் நடிக்கிறாருன்னா வேல்யு கம்மியா இருக்கும். அதனால எப்பவுமே இந்த மாதிரியான பிசினஸ்ல வந்து காம்பினேஷன் தான் ஒரு ரோல் பண்ணும்.
சிவகார்த்திகேயன் உண்மையை சொல்லப் போகணும்னா அவர் பிளாப் ஹீரோ தான். அவரோட சமீபத்திய படங்கள் எல்லாமே தோல்வி தான். இவருக்கு என்னன்னா ஒரு இணைய கூலிப்படையை வச்சிருக்காரு. அவருக்குன்னு ஒரு ஐடி விங் இருக்காங்க. இவங்க சிவகார்த்திகேயனுக்கு பெரிய பிலடப்பைக் கொடுக்கிறாங்க. அவரை ஒரு வெற்றிப்பட நாயகன் மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தி இருக்காங்க. எல்லாருக்குமே அப்படி படை இருக்கு.
ஆனா இவரோடது பொய்யை உண்மையைப் போல நிலைநிறுத்துவதுல கில்லாடிகள். அயலான் மிகப்பெரிய தோல்விப்படம். சமூக ஊடகங்களில் போய் பார்த்தால் அயலான் 5000 கோடி வசூலித்தாக பில்டப் பண்ணி வச்சிருப்பாங்க. இந்த மாதிரியான வெட்டி பில்டப்ல தான் சிவகார்த்திகேயனோட வண்டியே ஓடிக்கிட்டு இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது உலகநாயகன் கமலின் சொந்தப் படம் என்பதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருக்கிறது. எது எப்படியோ ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் போதும். கமலுடன் இணைந்துள்ளதால் இந்த முறையாவது ஜெயிப்பாரா சிவகார்த்திகேயன்?