225 கோடி சம்பளத்தை உதறி தள்ளிய நடிகர்.. அப்போ சிவகார்த்திகேயன் ரூட் சரிதான் போல

தயாரிப்பாளர்களின் நிலைமை: இன்று பெரும்பாலான தயாரிப்பாளர்களின் சொத்து பல முன்னணி நடிகர்களின் வீட்டில்தான் கொட்டிக் கிடக்கிறது. அந்தளவுக்கு கோடி கோடியாக சம்பளம் என்ற வகையில் பேசி அந்த படம் நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்கு பேசிய சம்பளத்தை வாங்கிக் கொண்டு செல்கின்றனர். அந்த படம் ஓடுதோ இல்லையோ? தயாரிப்பாளர் செத்தானா இல்லையா என்று கூட கவலை பெரும்பாலான நடிகர்களுக்கு இருப்பது இல்லை.
பெருந்தொகையில் சம்பளம்: அந்த வகையில் மம்மூட்டி இதற்கு முற்றிலும் மாறாக இருக்கிறார். ஒரு தமிழ் இயக்குனர் மம்மூட்டியை வைத்து படம் பண்ணனும்னு ஆசையில் மம்மூட்டியை பல நாள்கள் பின் தொடர மம்மூட்டிக்கு விருப்பமே இல்லையாம். ஒன் லைனாவது கேளுங்க என்று சொல்ல அதன் பிறகு ஒன் லைனை கேட்டு நடிக்க சம்மதித்திருக்கிறார் மம்மூட்டி. அதோடு சம்பளமும் பெரும் தொகையாக கேட்டிருக்கிறார்.
சம்பளத்தை கேட்ட மம்மூட்டி: அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அதற்கு ஓகே சொல்லியிருக்கிறார். பின் படப்பிடிப்பு நடக்க நடக்க அந்த இயக்குனரின் ஈடுபாடு வேலை இது எல்லமே மம்மூட்டிக்கு பிடித்துப் போக படமும் ஒரு வழியாக முடிந்து விட்டது. தயாரிப்பாளர் மம்மூட்டியின் சம்பளத்தை கையில் வைத்துக் கொண்டே மம்மூட்டியை சுற்றி வந்திருக்கிறார். பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி டப்பிங்கும் பேசி முடித்துவிட்டாராம் மம்மூட்டி. அதன் பிறகு சம்பளம் ரெடியாக இருக்கிறதா என்று கேட்க கையிலேயே வைத்திருக்கிறேன் என தயாரிப்பாளர் சொல்லியிருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் யுத்தி: ஆனால் மம்மூட்டி சம்பளம் வேண்டாம். கேரளா ரைட்ஸ் மட்டும் வாங்கிக்கிறேன். ஏனெனில் படத்தின் கதையோட்டம் சுமார்தான். ஆனால் ஃபீல் குட் மூவி. பெரிய அளவில் போகாது. அதனால் ரைட்ஸ் மட்டும் போதும் என சொல்லி கேட்டாராம். அந்தப் படம் பேரன்பு. இயக்குனர் ராம். தயாரிப்பாளர் தேனப்பன். மம்மூட்டியை பொறுத்தவரைக்கும் படத்தின் கதைப்படி சம்பளத்தை ஃபிக்ஸ் செய்பவராம். ஆனால் நம்மூர் ஆட்கள் அப்படி கிடையாது. ஆனால் இதில் சிவகார்த்திகேயன் புதிய யுத்தியை கையில் எடுத்திருக்கிறார்.
இது ஒரு நல்ல ஆரோக்கியம்: பராசக்தி படத்திற்காக பிராஃபிட் ஷேர் அடிப்படையில்தான் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அவருக்கு மட்டுமில்லை. அவருடன் ஜெயம் ரவி, அதர்வா, சுதா கொங்கரா என நான்கு பேருக்கும் பிராஃபிட் ஷேர் அடிப்படையில்தான் இந்தப் படத்தில் சம்பளம். இதை மற்ற நடிகர்களும் பின்பற்றினால் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும். இந்த பிராஃபிர் ஷேர் என்ற ஒரு முறையை முதலில் பிரபலப்படுத்தியவர் ஹாலிவுட் நடிகரான கேயானு ரீவ்ஸ்.
1999 ஆம் ஆண்டு வெளியான தி மேட்ரிக்ஸ் படத்தின் ஹீரோதான் இவர். முதலில் இந்தப் படத்தின் கதையை கேட்டு பிடித்து போக அப்பவே அவருக்கு 225 கோடி சம்பளமாம். அதன் பிறகு கதை பிடித்து எனக்கு சம்பளம் வேண்டாம். பிராஃபிட் ஷேர் அடிப்படையில் வாங்கிக் கொள்கிறேன் என்று முதலில் இவரால்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. பின் இந்தப் படம் வெளியாகி அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியால் இவருக்கு கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா? 1300 டாலராம். இதை பலரும் அந்த சமயத்தில் வரவேற்றிருக்கிறார்கள். இதுவும் ஒரு வித கேம்ப்ளிங்க் மாதிரிதான். இது எல்லா படத்துக்கும் சரிவருமா என்று பார்த்தால் பெரிய ஹீரோக்கள் அந்தப் படத்தின் லாபத்தில் ஷேர் வாங்குவதுதான் சிறந்ததாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.