4 படம் ரெடியா இருக்கு!.. ஆனா ரிலீஸ் ஆகலயே.. அப்செட்டில் சிவகார்த்திகேயன்….

Published on: May 29, 2021
---Advertisement---

d7d7681e9d0e15680b695b6d8e985171

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் சிவகார்த்திகேயன். அதன்பின் தனுஷுடன் 3 உள்ளிட்ட சில படங்களில் சின்ன வேடங்களில் நடித்தார். அவரை மெரினா திரைப்படம் மூலம் கதாநாயகன் ஆக்கியவர் பாண்டிராஜ். அதன் பின் சில திரைப்படங்கள். எதிர் நீச்சல் திரைப்படம் அவரை முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மாற்றியது.

அதன்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களின் வெற்றி அவரை பல கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாற்றியது.  ஆனாலும், தயாரிப்பாளராக மாறி, அதில் சில திரைப்படங்களால் பல கோடி நஷ்டங்களுக்கும் ஆளானார். தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். 

435632f088257ba073a7e8c7e3812b80

இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் அவர் நடித்தும் வரும் டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தடை பட்டுள்ளது. ஒருபக்கம் அவர் ஏற்கனவே நடித்து முடித்த டாக்டர், வாழ் ஆகிய படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. 

டாக்டர் படத்தை இயக்கியவர் கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன். அருவி இயக்குனர் அருண் இயக்கத்தில் உருவான் திரைப்படம் வாழ்.  அதேபோல், அயலான் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. 

3c4afe58e9b428e661cc4f79728bee8e

எனவே, 4 திரைப்படங்கள் தயாரான நிலையில், கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்குமா என்பது தெரியவில்லை. இதில் டாக்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே, சிவகார்த்திகேயன் அப்செட்டில் உள்ளாராம்.
 

Leave a Comment