Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ரூ.25 கோடி கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயன்… எந்த படத்திற்கு தெரியுமா?…

ரூ.25 கோடி கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயன்… எந்த படத்திற்கு தெரியுமா?…

dc1af0d74ac3aad44d8a92f5316324e0

தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த திரைப்படம் ஜதி ரட்னலு (Jathi Ratnalu). ரு.6 கோடியில் உருவான இந்த திரைப்படம் ரூ.65 கோடியை வசூல் செய்தது. இப்படத்தை அனுதீப் என்பவர் இயக்கியிருந்தார். எனவே, இந்த இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்க தெலுங்கில் போட்டி ஏற்பட்டது.

இந்நிலையில், இவரின் அடுத்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் உருவாகும் இப்படத்தை ஏசியன் சினிமாஸ் நிறுவனத்தின் நாராயன் தாஸ் நாரங் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு முதன் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ரூ.25 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரூ.25 கோடி கிளப்பில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.

996b4cd11afb01fe378a72f5eeaf3d76-2

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் ரிலீஸ், அதிக சம்பளம் என்கிற காரணத்தால் தமிழ் சினிமா நடிகர்கள் 2 மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். ஏற்கனவே, பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தையும் ஏசியன் சினிமாஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top