More

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்… கன்னட சூப்பர்ஸ்டார் யாஷிற்கு மறைமுக சவால்

வெள்ளித்திரையில் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் டாக்டர் படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். ப்ரியங்கா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரோடக்‌ஷன் தயாரித்துள்ளது.

இந்நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை சிவா வெளியிட்டு இருக்கிறார். டான் எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைக்கா ப்ரோடக்‌ஷனுடன் சிவகார்த்திகேயன் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. சிபி இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்து பேர அடிச்சா சார் டான் ஆனீங்க… 
 

Published by
adminram

Recent Posts