
பிராங்க் ஷோ ஒன்றை நடத்திய அதை வீடியோ எடுத்து கொண்டிருந்த 6 இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த சில ஆண்டுகளாக பிராங்க் ஷோ என்ற பெயரில் பொது மக்களை பயமுறுத்தும் இம்சைப்படுத்தும் வழக்கம் அதிகமாகி வருகிறது. பிராங்க் ஷோவுக்கு யூடியூப்பில் அதிக வரவேற்பு கிடைப்பலும் அதிக பார்வையாளர்கள் கிடைப்பதாலும் பலர் பிராங்க் ஷோ எடுப்பதில் தீவிரமாக உள்ளனர்
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு இளைஞர்கள் குழு பிராங்க் ஷோ ஒன்றை சமீபத்தில் எடுத்தது. அதிகாலை 2 மணிக்கு ஒரு ஆட்டோ வந்தபோது அந்த ஆட்டோ முன் பேய்கள் போல் உடையணிந்து வழிமறித்து அந்த ஆட்டோவை நோக்கி 4 பேர் ஓடினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆட்டோ ஓட்டுனர் உண்மையான பேய்கள் தான் என்று பயந்து ஆட்டோவை ரிவர்ஸ் கியர் போட்டு மிக வேகமாக சென்று விட்டார்
இதுகுறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில் இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனர் போலீசிடம் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகள் ஆதாரத்தையும் வைத்து பிராங்க் ஷோவை எடுத்த செய்த 6 பேர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்
பிராங்க் ஷோ என்ற பெயரில் அத்து மீறுவது சட்டப்படி குற்றம் என்றும் இதுபோன்ற குற்றங்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்



