அதை மட்டும் சொல்ல முடியாது!.. எஸ்.ஜே. சூர்யா ட்விஸ்ட்!.. அப்போ குட் பேட் அக்லி கொலை குத்துதான்!..
நடிகர் அஜித் குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே விடாமுயற்சி படத்திற்கு பிரேக் விடப்பட்ட நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் அதிரடியாக முதல் ஷெட்யூலையே முடித்து விட்டார். ஹைதராபாத்தில் ஷூட்டிங்கை முடித்த அஜித் குமார் திருப்பதியிலும் ஒரு விசிட் அடித்து விட்டு விடாமுயற்சி இந்த முறையாவது தடங்கள் இல்லாமல் ஒரே மூச்சில் முடிய வேண்டிக் கொண்டு கிளம்பினார்.
அஜர்பைஜானுக்கு அஜித் குமார் வந்து விட்டார் இந்த முறையாவது விடாமுயற்சியை முடித்து விடலாம் என நினைத்த மகிழ் திருமேனிக்கும் லைகா நிறுவனத்துக்கும் ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை பெரிய ஏழரையை கொடுத்து விட்டது.
படம் கிடக்குது படம் மனைவி தான் முக்கியம் என காதல் மனைவி ஷாலினியை பார்க்க ஓடோடி வந்து விட்டார் அஜித் குமார். விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வராது என்றும் பொங்கலுக்கு குட் பேட் அக்லி வருமா என்று சந்தேகங்கள் கிளம்பி விட்டன.
இது ஒரு பக்கம் இருக்க சொதப்பல் படங்களை எடுத்து வந்த ஆதிக் ரவிச்சந்திரன் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவை வைத்து இயக்கிய மார்க் ஆண்டனி படத்தின் மூலம் 100 கோடி ரூபாய் வசூல் அள்ளிய இயக்குனராக மாறிவிட்டார்.
அதே சூட்டில் அஜித்துக்கும் கதை சொல்லி ஓகே வாங்கி மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி படத்தை ஆரம்பித்துள்ளார். மார்க் ஆண்டனி படத்திலேயே அஜித் குமார் பற்றி ஏகப்பட்ட ரெஃபரன்ஸ் கடைசியாக விடாமுயற்சி வரை ரெஃபரன்ஸ் வைத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இந்நிலையில், அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கிய எஸ்.ஜே. சூர்யா ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து இயக்கி வரும் குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதுதொடர்பான கேள்விக்கு இப்போதைக்கு அதுபற்றி தான் ஏதும் சொல்ல முடியாது. நடந்தா நல்லாத்தான் இருக்கும் என்பது போல அவர் சிரித்த சிரிப்பை பார்த்தே ரசிகர்கள் கன்ஃபார்ம் ஆதிக் ரவிச்சந்திரன் எஸ்.ஜே. சூர்யாவை அஜித்துடன் நடிக்க வைப்பார் எனக் கூறுகின்றனர்.