
2019ம் வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை நீடித்தது. தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் பொதுமக்களால் இதை காண முடிந்தது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அறக்கட்டளையின் சார்பாக மக்கள் சூரிய கிரகத்தை நேரடியாக காண்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சூரிய கண்ணாடிகளையும் பயாஸ்கோப் மூலமாகவும் மக்களுக்கு சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எனவே, பொதுமக்கள் பலரும் அங்கு குவிந்து சூரிய கிரகணத்தை கண்டு களித்தனர்.

இந்த கங்கண சூரிய கிரகணம் நிகழ்வு ஒரு அற்புதமான வானியல் நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வு 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடியது. மேலும், இதனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.



