More

போலீஸ் பிரச்சனைகள் பற்றி நல்லவிதமாக எடுக்கப்பட்ட சில நல்ல படங்கள்!

போலீஸாகப் பணியாற்றிய என்னுடைய அப்பா வொர்க் பிரசர் காரணமாகத் தான் இறந்தார் – சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன். 

Advertising
Advertising

இதற்கேற்றார் போல போலீஸ் துறைக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினைகளை ராட்சசன் (கீழ் அதிகாரி சொல்வதை அலட்சியப்படுத்துவது), திருடன் போலீஸ்(தனக்கு பிடிக்காதவனின் மகனை வீட்டு வேலைகள் செய்ய விடுவது வெயிலில் காய விடுவது), எட்டு தோட்டாக்கள் (அப்பாவி என்பதால் ஹீரோவை அனைவரும் டார்கெட் செய்வது) போன்ற படங்கள் கூறியுள்ளன. 

மனித உரிமை ஆணையரின் பவர் என்ன என்பதை சேதுபதி படத்தில் நன்கு கூறி இருப்பார்கள்.

என்கவுன்டருக்கு எதிரான சிறப்பான படம் என்றால் அது துப்பாக்கி முனை என்று சொல்லலாம். 

நாயகன் ஒரு என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட்

நாயகனின் அம்மா –  மருத்துவர். தொழில் ரீதியாக இருவருக்கும் (தாய் – மகன்) கருத்து வேறுபாடு இருக்கும். அடிக்கடி சண்டை வந்து பேசாமல் இருப்பார்கள். ஒருநாள் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அம்மா ஒரு உயிர காப்பாத்த நாங்க(மருத்துவர்) எவ்ளோ கஷ்டப்படுறோம் தெரியுமா, பொசுக்குனு சுட்டுத்தள்ளுற நீயெல்லாம் மனுசனா” என்று அம்மா மகனிடம் வேதனை அடைவார். 

அந்தப் படத்தின் கிளைமேக்ஸில் எம்.எஸ். பாஸ்கரிடம் “உங்க பொண்ண ரேப் பண்ணவன் கைல கிடைச்சும் நீங்க ஏன் கொல்லல” என்று இளம்பெண் நிரூபர் கேட்க “எதுக்கு கொல்லனும்?” என்று விளக்கம் கொடுப்பார் எம்.எஸ். பாஸ்கர். அவ்வளவு நன்றாக இருக்கும்

Published by
adminram

Recent Posts