More

தனக்கு உதவிய எஸ்.பி,பி. இறுதி அஞ்சலிக்கு கூட வராத அஜித்?- அப்படி என்னதான் கொள்கையோ?

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.அவருக்காக அனைவருமே பிராத்தித்தனர்.ஆனால் பிராத்த்னைக்கு பலன் கிடைக்கவில்லை. நேற்று அவர் தனது இறுதி மூச்சை நிறுத்தினார். எஸ்.பிபி.யின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் தாமரை பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடைபெற்று வருகிறது. அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆனால் அவரால் ஹீரோ வாய்ப்பை பெற்ற அஜித் வரவில்லை என்று கூறப்படுகிறது. 

Advertising
Advertising

அதாவது நடிகர் அஜித்குமார், நடிக்க துவங்கிய ஆரம்ப காலத்தில், திரையுலகில் வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், ஹீரோ வாய்ப்புக்கான முயற்சியில் கிடைத்த சில வாய்ப்புகள் தள்ளி போய் கொண்டேயிருந்தது.  நடித்தால் ஹீரோ என்று, வரும் வாய்ப்புக்களை தவறவிட்டால் பின்னாளில் பாதிப்பு என்று அவர் மனம் சொல்லியது. அந்த நேரத்தில் அவருக்கு தமிழ்ப்படம் ஒன்றில் சிறிய வாய்ப்பு கிடைத்தது. 1990ல் சுரேஷ் – நதியா நடித்த ‘என் வீடு என் கணவன்’ என்ற படத்தில் சீருடை அணிந்த பள்ளி மாணவன் ஒருவன், சைக்கிளைத் தள்ளியபடியே சக மாணவியுடன் பேசிக்கொண்டே வருவார். அதை கவனித்த சுரேஷ், படிக்கிற வயசுலயே லவ்வா? என அதட்டி அனுப்பும் அந்தக் காட்சியில், பள்ளி மாணவனாக வந்தவர் வேறுயாருமல்ல, நம்ம தல யே தான்!

1993ல் தெலுங்கில் பூர்ணசந்திரராவின் பிரேம் புஸ்தகம் படத்தில் அஜீத்துக்கு ஹீரோவா நடிக்க வாய்ப்பைத் தேடிக் கொடுத்தவரும் எஸ்.பி.பி.தான். பொதுவாகவே அஜித் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை. ஆனால் அதற்காக தனது உதவிய எஸ்.பி.பி க்கு கூட இறுதி அஞ்சலி செலுத்தக்ம்கூட வர முடியாதா என்றும் அப்படி என்னதான் மண்ணாங்கட்டி கொள்கை வைத்திருக்கிறாரோ அஜித் என்றும் இணையத்தில் பலரும் கருத்துக்களை கூறுகின்றனர். 

Published by
adminram

Recent Posts